நவம்பர் 21, தலைமை செயலகம் (Chennai News): அரேபியாவில் உள்ள கத்தாரில் கடந்த 15 மற்றும் 16ஆம் தேதியில் மோட்டார் பந்தய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த வீரரான ஜெஃப்ரி இமானுவேல் கலந்து கொண்டார். அவர் இப்போோட்டியில் கலந்து கொண்டு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்திருந்தார். CBSE Board Exam Date Sheet 2025: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
துணை முதல்வர் பாராட்டு:
வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், தாயகம் திரும்பிய ஜெஃப்ரி இமானுவேலுக்கு தமிழ்நாடு துணை முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பாராட்டுகளை தெரிவித்து தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் காசோலையை வழங்கி பாராட்டினார்.
ஜெப்ரியை துணை முதல்வர் பாராட்டிய காட்சி:
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், கத்தாரில் நடைபெற்ற மோட்டார் பந்தயப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர் திரு. ஜெஃப்ரி இம்மானுவேல் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததுடன், ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை (TNCF) நிதியிலிருந்து வழங்கினார். pic.twitter.com/stahoia2SU
— TN DIPR (@TNDIPRNEWS) November 20, 2024