
ஏப்ரல் 08, வாரணாசி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியை (Varanasi) சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மார்ச் மாதம், பிஷாச்மோச்சன் பகுதியில் உள்ள ஹூக்கா பாருக்கு நண்பருடன் சென்றுள்ளார். அதன்பிறகு, அந்த மாணவி காணாமல் போனதாக, அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், 23 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறைவா என்ன கொடுமை இது? சாலையை அலட்சியமாக கடந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிரவைக்கும் காட்சிகள்.!
குளிர்பானத்தில் போதை மருந்து:
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவி, விளையாட்டு குறித்த பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்காக தயாராகி உள்ளார். அதனை தொடர்ந்து, இங்குள்ள ஒரு கல்லுாரியில் ஓட்டப் பயிற்சிக்காக தவறாமல் சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று, ஒரு நண்பர், அந்த பெண்ணை பிஷாச்மோச்சன் பகுதியில் உள்ள ஒரு ஹூக்கா பாருக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களுடன் மேலும் சிலர் சேர்ந்து கொண்டுள்ளனர். அப்போது மாணவிக்கு, குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்தனர்.
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை:
இதனைத்தொடர்ந்து, அந்த மாணவியை சிக்ரா பகுதியில் உள்ள பல்வேறு ஹோட்டல்களுக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape) செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த மார்ச் 29 முதல் ஏப்ரல் 04 வரை நடைபெற்றுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. புகாரின் அடிப்படையில், 23 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். இதில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 11 பேர் அடையாளம் காணப்படவில்லை. மற்றவர்களை வலைவீசி தேடி வருகிறோம் என அவர் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3