Madras High Court (Photo Credit: Wikipedia)

ஏப்ரல் 08, சென்னை (Chennai News): சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High Court) உயர்நிலை முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலான காலி பணியிடங்களுக்கு அடுத்த மாதம் மே 05ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்த மே 06ஆம் தேதி கடைசி நாளாகும். சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், ரூம் பாய், தூய்மைப் பணியாளர்கள், வீட்டு உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொது எழுத்துத் தேர்வு, திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். Gym Boy Death Case: ஜிம்மில் ஊக்கமருந்து ஊசி செலுத்திய வாலிபர் துடிதுடித்து பலி.. ஜிம் பயிற்சியாளர் மீது குற்றச்சாட்டு..!

காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் - 137

வீட்டு உதவியாளர் - 87

தூய்மைப் பணியாளர் - 73

சுகாதார பணியாளர் - 49

தோட்டப் பணியாளர் - 24

சோப்தார் - 12

காவலர் - 4

ரூம் பாய் - 4

வாட்டர்மேன் - 2

சம்பள விவரம்:

ரூ.15,700 - ரூ.58,100 + சிறப்பு அலவன்ஸ் கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதேபோல், நீதிபதிகளின் உதவியாளர்கள் (28), தலைமை பதிவாளரின் தனி செயலாளர் (1), பதிவாளர்களின் உதவியாளர்கள் (14) மற்றும் கிளர்க் (4) ஆகிய காலிப்பணியிடங்களும் உள்ளன. மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதன் விரிவான அறிவிக்கை, விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்களை அறிய, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சேர்ப்பு இணையதளத்தில் https://www.mhc.tn.gov.in தெரிந்து கொள்ளலாம்.