ஏப்ரல் 08, காசிமேடு (Chennai News): சென்னை, காசிமேடு (Kasimedu) ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் ராம்கி (வயது 35). இவர், அப்பகுதியில் உள்ள ஸ்வெட் ஷோன் என்ற ஜிம்மில், கடந்த 6 மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். மேலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஊக்க மருந்து ஊசியினை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வயிற்று வலி, உடல் வலியால் கடும் அவதியடைந்துள்ளார். இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கல்லீரல் பாதிப்படைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். Female IT Employee Dies: அரசு பேருந்து மோதி ஐடி பெண் ஊழியர் பலி.. சோக சம்பவம்..!
உறவினர்கள் புகார்:
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், ஜிம் பயிற்சியாளரின் அறிவுரையின் பேரில் ஊட்டச்சத்து மருந்துகள் எடுத்துக் கொண்டதால் தான் உயிரிழந்ததாகவும், ஜிம் பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.