Krishnagiri Accident: ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றவர்களுக்கு சோகம்; ஓட்டுனர்களின் போட்டா-போட்டியால் 40 பேர் காயம்.!

தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையே நிலவிய போட்டித்தன்மை காரணமாக, கோவிலுக்கு புறப்பட்டுச் சென்ற பயணிகள் பேருந்து விபத்தில் விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Uthangarai Accident on 27-Dec-2024 (Photo Credit: @Sunnewstamil X)

டிசம்பர் 27, ஊத்தங்கரை (Krishnagiri News): தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டயம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் மக்கள், மேல்மருவத்தூர் பராசக்தி கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து புறப்பட்டனர். இவர்கள் 3 பேருந்துகளில் இன்று அதிகாலை மேல்மருவத்தூர் நோக்கி பயணம் செய்தனர்.

போட்டா-போட்டி பயணம்:

அப்போது, வழியில் மூன்று பேருந்துகளும் ஒன்றையொன்று முந்தியபடி போட்டிபோட்டு பயணம் செய்துள்ளன. இந்நிலையில், இறுதியாக வந்த பேருந்து ஒன்று, முன்னால் சென்றுகொண்டு இருந்த பேருந்தை முந்த முற்பட்டுள்ளது. இந்த பேருந்தில் எட்டயம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் நபர்கள் இருந்துள்ளனர். Rain Alert: மதியம் 1 மணிவரையில் 13 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் முந்திச்செல்லும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 52 பெண்களில் 40 பேர் காயமடைந்தனர்.

காவல்துறை விசாரணை:

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உள்ளூர் மக்கள், மக்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து ஊத்தங்கரை காவல்துறையினர் & தீயணைப்பு மீட்பு படையினரும் நிகழ்விடம் விரைந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை காரணமாக சாலைகளில் நீர் இருந்த நிலையில், பேருந்து ஒன்றையொன்று வேகத்தில் முந்திச் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்தது அம்பலமானது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement