டிசம்பர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): தெற்கு ஆந்திரம் - வட தமிழ்நாடு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததன் காரணமாக, இன்று (Today Weather) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) அறிவிப்பில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, மதியம் ஒரு மணி வரையில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான இடி-மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்ட அண்ணாமலை; பரபரப்பு பேட்டி.. முழு விபரம் உள்ளே..!
மதியம் 1 மணிவரையில் மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 27, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)