Bomb Threat At Chennai Temples: சென்னையில் பரபரப்பு.. கோயில்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. பீதியில் மக்கள்..!

சென்னை கோயில்களுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bomb Threat At Chennai Temples (Photo Credit: Pixabay)

மார்ச் 06, சென்னை (Chennai): நேற்று கர்நாடக அரசுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் (Bomb Threat) வந்தது. பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள் போன்றவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் என்று அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள கோயில்களுக்கு (Chennai Temples) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையின் மின்னஞ்சல் முகவரிக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளனர். பெங்களூரு காவல்துறை வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான தகவலை சென்னை காவல்துறையிடம் தெரிவித்தது. School College Leave: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் மாசித்திருவிழா.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1-ம் தேதி பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடித்து 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்படுவதால், பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement