School College Leave: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் மாசித்திருவிழா.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

School College Leave: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் மாசித்திருவிழா.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
Jharkhand School Students (Photo Credit: PTI)

மார்ச் 06, புதுக்கோட்டை (Pudukottai): புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் (Thiruvapur Muthumariamman Temple) பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இந்த கோவிலின் மாசி மகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் (Chariot Festival) மார்ச் 11 ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. Sensex Crosses 74K: தொடரும் காளை ஆதிக்கம்.. வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்..!

இதையொட்டி அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (School College Leave) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை இந்த விடுமுறைக்கான பணிநாள் எனவும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா (Mercy Ramya) அறிவித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Mar 06, 2024 04:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).