TN Weather Report: தமிழகத்தில் அடுத்த வாரம் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Chennai Rains Cloud (Photo Credit: Twitter)

மார்ச் 14, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் (Chennai Meteorological Department)) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று முதல் மார்ச் 19 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 20 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: மேலும், அந்த அறிக்கையில், "இன்று முதல் மார்ச் 16 வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி மார்ச் 18 வரை, அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம். Elephant Throws Scooters: மாவு பிசையுறதபோல ஆட்டோவை பிசைந்தெடுத்த யானை.. வைரலாகும் வீடியோ..!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement