Tamil Nadu Weather Report: 21 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் (மஞ்சள் அலர்ட்) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Yellow Alert (Photo Credit: Pixabay)

ஜனவரி 09, சென்னை (Chennai): வட தமிழக கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மதியம் 1 மணி வரை திண்டுக்கல், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி , கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுகோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. TN Bus Strike: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்... நடு வழியில் பேருந்தை நிறுத்தி தப்பியோடிய ஓட்டுநர்..!

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement