Mother Kills Child: 5 மாத ஆண் குழந்தை தண்ணீரில் அமுக்கி கொலை.. தாய் கொடூர செயல்..!

புதுக்கோட்டையில் தாய் தனது 5 மாத ஆண் குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Baby (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 07, புதுக்கோட்டை (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டம், புலியூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி மணிகண்டன் - லாவண்யா. கடந்த ஆண்டு, இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. குழந்தை, நேற்று (ஏப்ரல் 06) தம்பதியின் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் பேரலில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடும்பச்சண்டையில் கொடூரம்.. உறங்கிக்கொண்டிருந்த மனைவி எரித்துக்கொலை.!

குழந்தை கொலை:

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தாய் லாவண்யாவிடம் விசாரணை நடத்தினர். அதில், 2 முகமூடி அணிந்த நபர்கள் அதிகாலை வீட்டிற்கு வந்ததாகவும், தன்னிடம் இருந்து தங்க நகைகளை பறித்துக்கொண்டு குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டு சென்றதால் குழந்தை இறந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதில், சந்தேகமடைந்த காவல்துறையினர், லாவண்யா, அவரது தாயார் மற்றும் சகோதரியிடம் நேற்று முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

தாய் கொடூர செயல்:

விசாரணையின் முடிவில், மணிகண்டன் - லாவண்யா ஆகிய இருவரும் குடும்ப தகராறில் (Family Dispute) பிரிந்திருந்த நிலையில், மன வேதனையில் லாவண்யா இருந்ததாகவும், அதன் காரணமாகவே 5 மாத குழந்தையை தண்ணீர் பேரலில் அமுக்கி கொன்றதாகவும் (Murder) லாவண்யாவின் தாயார் வாக்குமூலம் அளித்தார். குழந்தையை கொன்றதற்கு மன அழுத்தம் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement