Manapparai Wife Murder Case 07 April 2025 (Photo Credit: YouTube)

ஏப்ரல் 07, மணப்பாறை (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை , ராஜாளிக்கவுண்டம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னத்தம்பி (வயது 62). இவரின் மனைவி செல்லம்மாள் (வயது 48). சின்னத்தம்பிக்கு மல்லிகா (45) என்ற இரண்டாவது மனைவியும் இருக்கிறார். மல்லிகா தனது மகனுடன் தற்போது வசித்து வருகிறார். இதனால் செல்லம்மாள் - சின்னத்தம்பி தம்பதி ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இருவரும் மாலைமடைபட்டியில் இருக்கும் தோட்டத்து வீட்டில், விவசாய பணிகளை கவனித்தும் வந்துள்ளனர். இதனிடையே, விவசாய பணிகளில் கவனம் செலுத்தாமல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லாமல் அலைக்கழித்து வந்த சின்னத்தம்பி - செல்லம்மாள் இடையே அவ்வப்போது சண்டை நடப்பது வாடிக்கையானது என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு உண்டாகி வந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் நேற்று உறங்கிக்கொண்டு இருந்த செல்லம்மாள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். 14-Year-Old Girl Dies: வகுப்பறையில் மாணவிக்கு நேர்ந்த சோகம்; மயங்கி விழுந்து பரிதாப பலி.! 

கொலை வழக்குப்பதிவு:

உடலில் தீப்பற்றி சுமார் 90% தீக்காயத்துடன் படுகாயமடைந்த செல்லம்மாள், தற்கொலைக்கு முயன்றதாக சின்னத்தம்பி அக்கம் பக்கத்தினரிடம் உதவி கோரியுள்ளார். அவர்கள் செல்லம்மாளை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெண்மணி திருச்சி அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறையினர் நேரில் வந்து மரண வாக்குமூலம் கேட்டபோது, கணவர் சின்னத்தம்பி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததாக கூறி உயிரிழந்தார். இதனால் சின்னத்தம்பி மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதிரடியாக அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது.