2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை.. தாய் கொடூர செயல்.., கணவருக்கு அதிர்ச்சி சம்பவம்..!

சேலத்தில் குடும்ப தகராறில் தாய் தனது இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Child Murder in Salem (Photo Credit: YouTube)

ஏப்ரல் 29, வாழப்பாடி (Salem News): சேலம் மாவட்டம், வாழப்பாடி (Vazhapadi) அருகே அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி விஜயகுமார் (வயது 28) - இளவரசி (வயது 26). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு (Family Dispute) ஏற்பட்டு வந்துள்ளது. காவல்நிலையத்தில் நுழைந்த சிறுத்தை.. பீதியடைந்த காவலர்.., வெளியான சிசிடிவி காட்சி உள்ளே..!

குழந்தைகளை கொன்ற தாய்:

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 28) மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர், கணவர் வெளியே சென்றுள்ளார். அப்போது, மனைவி இளவரசி வீட்டில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியில் தனது 2 குழந்தைகளை வீசி கொலை (Child Murder) செய்துள்ளார். இதனையடுத்து, தாய் தலைமறைவானர். இதுகுறித்து தகவல் அறிந்த கணவர், வரும் வழியில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

தாய் கைது:

இதனையடுத்து, காவல்துறையினர் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாகி இருந்த தாய் இளவரசி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement