காவல்நிலையத்தில் நுழைந்த சிறுத்தை.. பீதியடைந்த காவலர்.., வெளியான சிசிடிவி காட்சி உள்ளே..!

நீலகிரியில் சிறுத்தை ஒன்று காவல்நிலையத்தில் நுழைந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

காவல்நிலையத்தில் நுழைந்த சிறுத்தை.. பீதியடைந்த காவலர்.., வெளியான சிசிடிவி காட்சி உள்ளே..!
Leopard Enters Police Station in Nilgiris (Photo Credit: @supriyasahuias X)

ஏப்ரல் 29, ஊட்டி (Nilgiris News): நீலகிரி மாவட்டம், கூடலூர் - ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடுவட்டம் காவல்நிலையத்திற்குள் நேற்று (ஏப்ரல் 28) இரவு சிறுத்தை நுழைந்துவிட்டது. அப்போது, நுழைவு வாயில் அறைக்குள் நுழைந்த சிறுத்தை (Leopard), அறையை சுற்றிப் பார்த்தது வெளியே சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர், சிறுத்தை வெளியே சென்றதை உறுதி செய்தவுடன், மெதுவாக வெளியே வந்து, நுழைவாயில் கதவை பூட்டினார். பிறகு, இச்சம்பவம் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.. இதனையடுத்து, நடுவட்டம் வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் வீடியோ காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Trending Video: கட்சி நிர்வாகிகளுக்கு மதுவுடன் தடபுடல் விருந்து? எம்.எல்.ஏ பெயரில் வைரலாகும் வீடியோ.!

சிசிடிவி வீடியோ இதோ:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 01:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).