NIA Raid: தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை வழக்கு.. 15 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை.!

கடந்த 2019ம் ஆண்டு பாமக நிர்வாகி ராமலிங்கம் மதபோதனை செய்ய வந்தவர்களிடம் எழுந்த தகராறைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நபர்கள் குறித்து விசாரணை என்ஐஏ சார்பில் தொடருகிறது.

PMK Ramalingam | NIA Logo (Photo Credit: @factmailnews / @Kanmani_Gunas X)

ஜனவரி 28, சென்னை (Chennai News): தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், திருபுவனம் பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் (Pattali Makkal Katchi) நிர்வாகி ராமலிங்கம் (Ramalingam Murder Case), கடந்த பிப்ரவரி 05, 2019 அன்று கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில், அவர் வசித்து வரும் பகுதிக்கு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட இஸ்லாமியர்களிடம் அவர் பல கேள்விகளை முன்வைத்தால் கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. Bhurai Building Collapse: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 25 பேரின் கதி என்ன? தலைநகரில் சோகம்.! 

பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு:

வழக்கில் தொடர்புடைய நபர்களில் தஞ்சாவூரை மாவட்டத்தை சேர்ந்த முகமது அசாருதீன், முகமது ரியாஸ், நிஜாம் அலி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விசாரணை தேசிய புலனாய்வு முகமை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தற்போது வரை சிலர் தலைமறைவாக இருக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், என்ஐஏ அதிகாரிகள் அவ்வப்போது சோதனையும் நடத்தி வருகின்றனர்.

இன்று 15 இடங்களில் சோதனை:

இந்நிலையில், சென்னையில் உள்ள பெருநகர் பகுதிகளில் 5 இடங்கள், மயிலடுத்துரை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, திருமுல்லைவாசல் பகுதிகளில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்படி விரிவான அறிக்கை சோதனை முடிந்ததும் வழங்கப்படும் என என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement