Delhi Bhurai Building Collapse (Photo Credit: @shaikshareef442 X)

ஜனவரி 28, புராரி (New Delhi News): புதுடெல்லி மாநிலத்தில் உள்ள புராரி (Bhurai), கௌசிக் என்க்ளேவ் பகுதியில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 400 சதுர அடி பரப்பில், 4 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தன. இதனிடையே, நேற்று மாலை சுமார் 06:30 மணிக்கு மேல், கட்டிடத்தின் பகுதிகள் (Builing Collapse) திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. Four People Drown In Sea: சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. கடலில் மூழ்கி 4 பேர் பலி..! 

25 பேர் சிக்கிக்கொண்டனர்:

விபத்து குறித்து தகவல் அறிந்த கவல்த்துறையினர், மாநில மற்றும் பேரிடர் மீட்புப் படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 22 முதல் 25 பேர் கட்டிடத்தின் இடிப்பாடுகளில் சிக்கி இருக்கலாம் என தெரியவந்தது. இன்று காலை வரை அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியோரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

10 பேர் மீட்பு:

கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானதில் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. காயத்துடன் மீட்கப்பட்ட பணியாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மேலும், கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதன் காணொளி: