Ganja Dealers Arrested: கஞ்சாவுடன் ரீல்ஸ் போட்ட போதை ஆசாமிகள்; கை, கால் எலும்பு முறிவுடன் பிடிபட்ட காட்சிகள் வைரல்..!

சென்னையில் கஞ்சாவுடன் வீடியோ வெளியிட்ட கஞ்சா வியாபாரிகளை, காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, கஞ்சா வியாபாரிகள் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.

Cannabis | Arrest File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 31, தாம்பரம் (Chennai News): தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா (Cannabis) மற்றும் போதை பொருட்களின் பயன்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் கஞ்சா வியாபாரி (Ganja Dealers) தீபக் மற்றும் அவரது கூட்டாளி சந்துரு ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் இவர்கள் இன்ஸ்டாகிராமில் கஞ்சாவுடன் ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து காவல்துறையினர் அறிந்த பிறகு, அவர்களை பிடிக்க முயன்றபோது, தப்பிக்க முயன்ற போது தீபக் மற்றும் சந்துரு ஆகியோர் கீழே விழுந்து கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. TN Weather Update: 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை காவல்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement