வானிலை: இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்க்கப்போகும் மழை.. 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

தமிழகத்தில் இரவு 10 மணிவரை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tamilnadu Rains File Pic (Photo Credit : @ETVBharatTN X)

செப்டம்பர் 16, நுங்கம்பாக்கம் (Chennai News): வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 'தம்பி வா.. தலைமை தாங்க வா' - தவெக தலைவர் விஜயை முதல்வர் பதவிக்கு அழைத்த அண்ணா.. தீயாய் பரவும் வீடியோ.! 

இன்றைய வானிலை (Today Weather):

இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை (Chennai Weather):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement