AI Video of Annadurai Praising Vijay (Photo Credit : @nabilajamal_ X)

செப்டம்பர் 16, சென்னை (Chennai News): அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றி திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தமிழகத்தை கடந்த 53 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்துள்ளன. தற்போது தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் விஜய் தவெக தலைவராக மக்களிடம் அறிமுகமாகி வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சி.என்.அண்ணாதுரை பாராட்டி பேசுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

விஜயை பாராட்டிய அண்ணா :

இந்த வீடியோவில் அண்ணா பேசியதாக, "கோடான கோடி மக்களின் உணர்வு மிக்க தம்பிகளின் பேராதரவு பெற்று முதலமைச்சர் நாற்காலியை சாமானியன் அலங்கரித்தான் என்ற சாதனையுடன் அன்று தலைமை தாங்க அண்ணாவாக தம்பிகளை அழைத்தேன். இன்று தம்பி விஜய் உன்னை அழைக்கிறேன். தம்பி வா.. தலைமை தாங்க வா" என்று புகழ்ந்து பேசும் (Annadurai Praised Vijay Video) வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இணையத்தில் பரவும் AI வீடியோ :

ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை புகழ்ந்து பேசுவது தொடர்பாக இந்த வீடியோ அமைந்துள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு கவனத்தை பெற்றுள்ளது. Gemini AI Couple Photo Prompts: ரெட்ரோ Couple முதல் சிறுவயது நினைவை கட்டியணைப்பது வரை.. உங்களுக்கான டிரெண்டிங் பிராம்ட்ஸ்.! 

அண்ணா பேசியதாக வெளியான வீடியோ :