வானிலை: இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இன்று தென் தமிழக பகுதிகளில் மிதமான மழையும், வடதமிழக பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Tomorrow weather (Photo Credit: LatestLY)

ஜனவரி 29, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ மழை ஏதும் பதிவாகவில்லை. கடந்த 24 மணி நேரத்தில்‌ சமவெளிப்பகுதியில் கரூர் பரமத்தியில் 33.2 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், 29-01-2025 இன்று தென்தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வடதமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்‌, மேலும்‌ காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. கட்சிக்கொடியுடன் பெண்களை இடைமறித்த கார்.. சென்னையில் பகீர் சம்பவம்.. 8 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்.! 

நாளைய வானிலை (Tomorow Weather):

30-01-2025 நாளை தென்தமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வடதமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜன.31, பிப்ரவரி 01, 2925 தேதிகளில் மழை நிலவரம்:

31-01-2025 அன்று தென்தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 01-02-2025 அன்று தென்தமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 12-Year-Old Girl Dies: அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிட்ட சிறுமி மூச்சுத்திணறி பலி? - தூத்துக்குடியில் சோகம்.! 

02-02-2025 அன்று தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 03-02-2025 மற்றும்‌ 04-02-2025 அன்று தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌.

சென்னை (Chennai Weather Today) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):

இன்று (29-01-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (30-01-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பறிலை 31 செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதும் இல்லை.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now