வானிலை: தமிழ்நாட்டில் கனமழை அறிவிப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

நாளை மறுநாள் முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக அறிவிப்பட்டுள்ளது.

Tomorrow weather (Photo Credit: LatestLY)

ஜனவரி 27, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ மழை ஏதும் பதிவாகவில்லை. கடந்த 24 மணி நேரத்தில்‌ சமவெளிப்பகுதிகளில், ஈரோட்டில் 33.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று (27-01-2025) விலகியது. 27-01-2025 மற்றும்‌ 28-01-2025 வரையில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. 29-01-2025 அன்று தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. 30-01-2025 அன்று தென்தமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும்‌ தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2 Month Baby Died: தடுப்பூசி செலுத்திய சிலமணித்துளிகளில் விபரீதம்; 2 மாத குழந்தை மரணம்..! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

31-01-2025 அன்று தென்தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும்‌ தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 01-02-2025 அன்று தென்தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ யிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ மலைப்பகுதிகள்‌, தென்காசி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 02-02-2025 அன்று தென்தமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னை (Chennai Weather) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):

இன்று (27-01-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (28-01-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

27-01-2025 அன்று தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. 28-01-2025 அன்று தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now