ஜனவரி 27, பவானி சாகர் (Erode News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் (Bhavani Sagar), இக்கரை தத்தப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் கெளதம். இவரின் மனைவி அசின். தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அசின் கர்ப்பமாக இருந்தார். அதனைத்தொடர்ந்து, அசின் கடந்த 2 மாதங்களுக்கு (2 Month Baby Died) முன்னதாக பெண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். தற்போது வரை குழந்தை நலமுடன் இருந்த நிலையில், ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சென்னையில் மாயமான 7 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு; தாய் மகிழ்ச்சி.!
குழந்தை மரணம்:
அங்கு குழந்தைக்கு ஊசி செலுத்தப்பட்ட நிலையில், வீட்டிற்கு சென்ற 2 மாத பச்சிளம் குழந்தை மயங்கி இருக்கிறது. இதனால் குழந்தையை உடனடியாக முகாமுக்கு எடுத்துச் சென்ற நிலையில், அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தை தடுப்பூசி செலுத்தியதால் உயிரிழந்துவிட்டது. குழந்தையின் மரணத்திற்கு காரணம் வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் கண்ணீர்ப்பட தெரிவித்து இருக்கின்றனர்.