Ranipet News: ஒரே இரவில் 3 பேர் கொடூர கொலை.. ராணிப்பேட்டையில் பயங்கரம்..!

ராணிப்பேட்டையில் ஒரே இரவில் 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ranipet Murder Case (Photo Credit: YouTube)

மே 15, ராணிப்பேட்டை (Ranipet News): ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி புவனேஸ்வரி, விஜய் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு (Family Dispute) ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், நேற்று இரவும் தகராறு ஏற்பட்ட நிலையில், பாலுவை பிரிந்த புவனேஸ்வரி கீழ்புதுப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு அடி, உதை..!

3 பேர் கொடூர கொலை:

இதனால் மிகவும் மன விரக்தியில் இருந்த பாலு, தனது மாமியார் பாரதி, விஜயின் தந்தை அண்ணாமலை, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரை ஒரே இரவில் கொலை செய்துள்ளார். இதுகுறித்து, 3 பேரையும் கொடூரமாக கொலை (Murder) செய்த பாலுவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளத்தொடர்பு பிரச்சனை காரணமாக கணவர் வெறிச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement