ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு அடி, உதை..!
ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆந்திராவை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மே 14, ஜோலார்பேட்டை (Tirupathur News): சேலம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி தனது 9 வயது மகளுடன் ஆந்திர பிரதேச மாநிலம், கடப்பாவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளனர். பின்னர், சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு நாகர்கோவில் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை (Jolarpet) அருகே ரயில் சென்றபோது, அவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் லுவாரம் பலமனேரி ரோடு பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் குமார் (வயது 30) என்பவர், மது போதையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு (Sexual Abuse) கொடுத்துள்ளார். உடனே, சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். Trichy News: 2 மகள்களை கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை.. கடன் தொல்லையால் விபரீதம்..!
சிறுமிக்கு பாலியல் தொல்லை:
இதனையடுத்து, அந்த வாலிபர் அங்கிருந்து வேறு பெட்டிக்கு சென்றுவிட்டார். பின்னர், வாலிபரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர். ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வந்ததும் அவர்களிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். பின்னர், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3
(The above story first appeared on LatestLY on May 14, 2025 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

