TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. வெளியானது அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 3,935 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தேதி குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

TNPSC Group 4 Exam (Photo Credit: YouTube)

ஏப்ரல் 25, சென்னை (Chennai News): தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 3,935 பணியிடங்களுக்கான இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும், குரூப் 4 தேர்வு தேதி குறித்த விவரங்களை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. 40 அடி உயர கரண்ட் வயரில் காத்திருந்த எமன்.. கூலித் தொழிலாளர்களுக்கு சர்ச்சில் நடந்த பயங்கரம்.!

தேர்வு நாள்:

2025, ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் நாள்:

இன்று (25-04-2025) முதல் மே மாதம் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிப்பது எப்படி?

இன்று முதல் மே மாதம் 24ம் தேதி வரை, www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ தேர்வாணைய இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement