ஏப்ரல் 25, திருச்சி நகரம் (Trichy News Today): திருச்சி மாவட்டத்தில் உள்ள பிராட்டியூரில் தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று தேவாலயத்தில் உள்ள தகர கூரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மேற்பார்வையாளராக நடராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். 4 பணியாளர்கள் மேற்கூரை அமைக்கும் பணியில் இருந்தனர். இவர்களில் இருவர் ராட்சத ஏணியில் மேலே இருந்து பணிகளை செய்து வந்தனர். தாயின் கள்ளக்காதலால் 2 வயது குழந்தை கொலை? தமிழகமே அதிர்ச்சி தரும் சம்பவம்..!
இருவர் மின்சாரம் தாக்கி மரணம்:
இதனிடையே, இவர்கள் பணியாற்றியபோது தகர ஏணி தவறுதலாக உயரமின்னழுத்த கம்பியில் மோதியது. இந்த சம்பவத்தில் ஏணியின் மேலே இருந்த புதுக்கோட்டை மாவட்டம் தானங்குடி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்ற கோபி, தர்மபுரியைச் சேர்ந்த பாக்யராஜ் உடலில் மின்சாரம் பாய்ந்தது. நொடியில் நடந்த துயரத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஏணியை தாங்கிப்பிடித்தபடி இருந்த சிவகுமார், நடராஜன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
40 அடி உயர்த்தில் இருந்தவர்கள் மின்சார கம்பிகள் இருப்பது தெரிந்து கவனத்துடன் பணியாற்றியபோதும் சிறிய அலட்சியம் அவர்களின் உயிரை பறித்துள்ளது.