Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு.. நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்..!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Silver Price (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 26, சென்னை (Chennai News): உலகளவில் நடைபெறும் போர்கள், அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தக முதலீடுகள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கணிசமாக உயர்வை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆயிரம் நோக்கி செல்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 26ஆம் தேதியான இன்று புதன்கிழமை, தங்கத்தின் விலை சற்று சரிவை கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

தங்கத்தின் விலை உயர்ந்தாலும், அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 26) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை ஒரு கிராமுக்கு ரூ.25 குறைந்து, கிராம் தங்கம் ரூ.8,050க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் சவரன் தங்கம் விலை ரூ.200 குறைந்து, இன்று ரூ.64,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) ஒரு கிராம் ரூ.2 குறைந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.106க்கும், வெள்ளி கிலோ ரூ.1,06,000க்கு விற்கப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement