Gold Silver Price: ரூ.57 ஆயிரத்தை கடந்தது சவரன் தங்கத்தின் விலை; நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.!
ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,120 க்கு விற்பனை செய்யப்படுவதால், நகை பிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அக்டோபர் 16, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல், உக்ரைன் - ரஷியா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர், இஸ்ரேல் - ஈரான் போர், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உட்பட பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கு மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. இதனால் பங்குசந்தைகளில் தொடர் ஏற்ற-இறக்கம் என நிலையற்ற சூழல் பல்வேறு நாடுகளையும் நேரடியாக மறைமுகமாக பாதித்து பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. Amma Unavagam: "இன்றும், நாளையும் அம்மா உணவகங்களில் இலவச உணவு" - முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 மடங்கு உயர்ந்த விலை:
தங்கத்தின் விலை கடந்த 2014ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றளவில் 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்து இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதையும் தாண்டி விற்பனையாகிறது. தங்க நகையை வாங்க நினைப்போர் தொடர்ந்து விலையேற்றத்தால் பரிதவித்து வந்தாலும், தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரிப்பால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது. இந்த விலை மேலும் இரட்டிப்பாக வாய்ப்புகள் அதிகம் என நகை விற்பனையாளர்களும் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்று (Gold Rate in Chennai) ரூ.57 ஆயிரத்தை கடந்தது:
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,140 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மட்டுமே ரூ.360 உயர்ந்த தங்கத்தின் விலையால், சவரன் தங்கம் விலை ரூ.57,120 என உயர்ந்து அதிர்ச்சியை தந்துள்ளது. அதேவேளையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.99,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் வெள்ளியின் விலை ரூ.99.99 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)