Palamedu Jallikattu 2025: இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு 2025: சீறிப்பாயும் காளையும், விடாப்பிடி காளையர்களும்.!

தைப்பொங்கலைத் தொடர்ந்து, தை மாதத்தின் இரண்டாவது நாளாகிய இன்று மாட்டுப்பொங்கல் 2025 சிறப்பிக்கப்படுகிறது.

Palamedu Jallikattu 2025 (Photo Credit: @ANI X)

ஜனவரி 15, பாலமேடு (Madurai News): தைப்பொங்கல் 2025 பண்டிகை நேற்று முதல் சிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அளவில் 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் அறுவடை திருநாளாகவும், உழவுக்கும்-மக்களுக்கும் உறுதுணையாக இருக்கும் கதிரவனை போற்றி கொண்டாடப்படும் சூரியப்பொங்கல் எனப்படும் தைப்பொங்கல் பண்டிகை நேற்று வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று மாட்டுப்பொங்கல் 2025 பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. Mattu Pongal 2025: உழவனின் நண்பனுக்கு மாட்டுப்பொங்கல்; பொங்கல் வைக்க நல்ல நேரம், வாழ்த்து இதோ.! 

இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு (Palamedu Jallikattu 2025):

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு (Avaniyapuram Jallikattu) நேற்று மதுரை மாநகரில் உள்ள அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில், ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் கார்த்திக் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். குன்னத்தூர் அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தையும், 13 காளைகளை அடக்கி திப்புவனம் முரளிதரன் 3ஆம் இடத்தையும் பிடித்தனர். சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை உரிமையாளரான பொன்னமவராதியை சேர்ந்த மலையாண்டி பெற்று சென்றார். முதல் பரிசு பெற்ற கார்த்திக்கு கார் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு (Palamedu Jallikattu Today) போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் 4820 காளை உரிமையாளர்களும், 1914 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் முன்பதிவு செய்துள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது:

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் நேரலை இணைப்பு 1:

 

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் நேரலை இணைப்பு 2:

 

காளைகளை விடாப்பிடியாக மல்லுக்கட்டி பிடிக்கும் காளையர்கள்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement