ஜனவரி 14, சென்னை (Chennai News): உலகில் வாழும் உயிரினங்களுக்கு, தனது கதிர்களின் வாயிலாக படியளந்து இன்மை புகுத்திடும் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டின் தை மாதத்தின் முதல் நாள் தைத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் உழவுக்கு உறுதுணையாக இருந்து, உலகத்துக்கே விடியலை வழங்கிடும் கதிரவனை போற்றி பொங்கல் வைத்து வழிபாடுகள் நடக்கும். 2025ம் ஆண்டின் தைப்பொங்கல் திருநாளில், பலரும் சூரியப்பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். Pongal Celebration 2025: பாரம்பரியபடி மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு; களைகட்டும் பொங்கல் பண்டிகை 2025..!
மாட்டுப்பொங்கல் (Mattu Pongal 2025) வைக்க நல்ல நேரம்:
அதனைத்தொடர்ந்து, ஜனவரி 15ம் தேதியான நாளை, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கும், காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு மாட்டுப்பொங்கல் சிறப்பிக்கப்படுகிறது. நாளை மாட்டுப்பொங்கல் வைக்க நல்ல நேரமாக காலை 8 மணிமுதல் 9 மணிவரை கணிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை நல்ல நேரப்படி பொங்கல் வைத்து வழிபடுபவர்கள், உங்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படலாம். நாளை வீடுகளில் பசு வைத்திருப்போர், அதனை சுத்தம் செய்து, பொங்கல் வைத்து வழிபாட்டு, அலங்கரித்து மாட்டுப்பொங்கல் கொண்டாடலாம். Anand Mahindra Pongal Wishes in Tamil: உலகத்தமிழர்களுக்கு, தமிழில் பொங்கல் 2025 வாழ்த்து தெரிவித்த ஆனந்த் மகேந்திரா.!
மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள் (Mattu Pongal Wishes Tamil 2025):
உழவனுக்கு உறுதுணையாக இருந்து, உழவனின் குடும்பத்தில் அங்கமாகிப்போன மாடு, என்றும் போற்றுதலுக்குரிய செயலை உழவனுக்காக மேற்கொள்கிறது. பசுவை இறைவனாக வழிபடும் பழக்கம் கொண்ட இந்து சமய வழிபாடு முறைகளில் மாட்டுப்பொங்கல் பட்டி பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மாட்டுப்பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு, எமது லேட்டஸ்ட்லி நிறுவனம், மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்களையும் உங்களுக்காக பதிவு செய்கிறது. பொங்கல் வாழ்த்துக்களை நீங்கள் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்களும் தெரிவிக்கலாம்.
1. உழவனுக்கு மட்டும் அல்ல ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிறகு உலகுக்கே நீ செல்லப்பிள்ளை தான், மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்!
2. கலைப்பறியாது உழைக்கும் உனக்கு தலை வணங்கி நன்றி கூறுகிறேன், மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்!
3. உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள், இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்!
4. இது உழவர்களின் தோழனை கொண்டாடும் திருநாள், அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்!
5. வீரத்தமிழர்களுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்!
6. தனித்த மௌனங்கள் உழவன் நண்பனுக்கு கவிதையால் ஒரு மரியாதை பொங்கலோ பொங்கல்!
ஒவ்வொரு வேலை நாம் சாப்பிடும் உணவும், பால் பொருட்களையும் தினம்தினம் உற்பத்தி செய்யும் விவசாயியிடம், முடிந்தளவு நேரடியாக பொருட்களை வாங்கி, அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றவும் உதவிடுவோம். லேட்டஸ்ட்லி நிர்வாகமும் தனது இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.