Motorola G34 5G Smart Phone Offer Sale: மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட் போன் அசத்தலான தள்ளுபடி விலையில் விற்பனை..!
பிளிப்கார்ட்டில், தள்ளுபடி விலையில் தற்போது மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட் போன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மே 30, சென்னை (Technology News): மோட்டோரோலா ஜி34 5ஜி (Motorola G34 5G) ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் தளத்தில் 21% தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பல சிறப்பம்சங்களை கொண்ட ஒரு சிறந்த mid-range ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது, இந்த போன் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால், மேலும் ரூ.1000 தள்ளுபடி பெற முடியும். இதனால், மொத்த விலை ரூ.9,999 ஆக குறைந்து விடும்.
சிறப்பம்சங்கள்:
இதில், 6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி (Octa-core Snapdragon 695 5G SoC) சிப்செட் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. Daughter Hanging Suicide: தாய் இறந்த துக்கத்தில் மகள் எடுத்த விபரீத முடிவு..!
மேலும், 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியுடன், ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் இயங்குகின்றது. ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50MP மெயின் கேமரா + 2MP மேக்ரோ (Macro) கேமரா, குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) மற்றும் FHD வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உடன், 16MP செல்பி கேமரா ஆகிய அம்சங்களுடன் உள்ளது.
5000mAh பேட்டரி திறன் கொண்ட, 20W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) IP52 தர வாட்டர் ரெபெல்லெண்ட் சப்போர்ட் மற்றும் தண்ணீர், தூசியிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஓசன் கீரின் (Ocean Green), சார்கோல் பிளாக் (Charcoal Black), ஐஸ் ப்ளூ (Ice Blue) போன்ற நிறங்களில் கிடைக்கும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)