Daughter Hanging Suicide: தாய் இறந்த துக்கத்தில் மகள் எடுத்த விபரீத முடிவு..!

தஞ்சாவூரில் தாய் இறந்த சோகத்தில் அவரது மகள் மிகுந்த மன வேதனையில் இருந்த வந்த நிலையில், திடீரென அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Daughter Hanging Suicide: தாய் இறந்த துக்கத்தில் மகள் எடுத்த விபரீத முடிவு..!
Hanging Suicide (Photo Credit: Pixabay)

மே 30, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை வடக்கு வீதியில் உள்ள தெலுங்கு செட்டி தெருவை சேர்ந்த தம்பதி கருணாநிதி-பிரேமாவதி. இத்தம்பதிக்கு சுதாகர் என்ற மகனும், சுகன்யா (வயது 36) என்ற மகளும் இருந்தனர். சுகன்யாவிற்கு திருமணம் ஆகாத நிலையில், அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். Medicinal Properties Of Sandalwood: நறுமணம் அளிக்கும் சந்தனத்தில் உள்ள மருத்துவ குணங்கள்..!

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக அவரது தாய் பிரேமாவதி இறந்துவிட்டார். தனது தாயின் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ள இவர், தனது தாய் உயிரிழந்ததில் இருந்து மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, சம்பவ நாள் அன்று இரவு நேரத்தில் அவரது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர், அறையில் உள்ள மின்விசிறியில் கயிற்றை கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளார்.

பின்னர், இதுகுறித்து சுகன்யாவின் சகோதரர் சுதாகர் தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on May 30, 2024 04:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).