Vivo X90 Pro Flagship: விவோ எக்ஸ் 90 மாடல் மொபைல் விற்பனை தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; விவோ பயனர்களுக்கு உற்சாக செய்தி.!
கேமராவுக்காக பெருவாரியாக தேர்வு செய்யப்படும் விவோ நிறுவனத்தின் கூடுதல் திறன் பெற்ற விவோ எக்ஸ் 90 ரக மாடல் செல்போன் விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18, புதுடெல்லி (Technology News): சீன ஸ்மார்ட்போன்களில் புகழ்பெற்ற செல்போனாக இருப்பது விவோ (Vivo Smartphones) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன். இந்த நிறுவனம் இந்திய சந்தைகளிலும் தனது செல்போன்களை அதிகளவு விற்பனை செய்து தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டது.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ் 90 (Vivo X90 Pro) மாடல். உயர்ரக கேமரா திறனுடன், சமீபத்திய புதிய[Poll ID="741" title="Telugu polling"] தயாரிப்புகளுக்கு ஏற்றாற்போல மாற்றம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது இந்திய சந்தைகளில் ஏப்ரல் 26 ம் தேதி நள்ளிரவு 12 மணிமுதல் அறிமுகமாகிறது. Love Killed: காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி.. பிறந்தநாளை சென்னையில் கொண்டாடிவிட்டு திரும்பும்போது பயங்கரம்.!
விவோ எக்ஸ் 90 மற்றும் விவோ எக்ஸ் 90 Pro மாடல் செல்போன்களின் விலை ஏப்ரல் 26ம் தேதி விற்பனை தொடங்கும் நேரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.78-inch AMOLED டிஸ்பிளே, 120 Hz Refresh Rate, 2K Resolution, 12 GB ரேம், 512 GB ரோம், 4810 mAh பேட்டரி, 120 W சார்ஜிங் திறன் உட்பட பல சிறப்பம்சத்துடன் விவோ எக்ஸ் 90 களமிறங்குகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)