நவம்பர் 27, சென்னை (Cooking Tips Tamil): ஒவ்வொரு வார இறுதியிலும், சைவ உணவுகளுக்கு அளிக்கப்படும் மதிப்புகளை போல, அசைவ விரும்பிகள் தங்களுக்கு பிடித்த அசைவ வகை உணவுகளை ருசித்து சாப்பிடுவது இயல்பானது. பலரும் ஆடு, மீன், சிக்கன் என தங்களுக்கு பிடித்த அசைவ வகை உணவுகளை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். இன்று மீனில் சுவையான குழம்பு செய்வது எப்படி? என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். வாரம் அல்லது மாதம் ஒருமுறை மீன் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். எந்த வகை மீன் குழம்பாக (Fish Curry Tamil) இருந்தாலும், நீங்கள் இம்முறையை பயன்படுத்தி சமைத்து ருசிக்கலாம். White Salna: இடியாப்பத்திற்கு ஏற்ற வெள்ளை சால்னா.. வீட்டிலேயே சட்டென செய்து அசத்துங்கள்.!
தேவையான பொருட்கள்:
சிறிய வெங்காயம் - 75 கிராம்
மீன் - 1 கிலோ
புளி - எலுமிச்சை பழ அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
தேங்காய் பேஸ்ட் - அரை மூடி
பெருஞ்சிரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 கரண்டி
சீரகத்தூள் - 2 கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - சிறிதளவு
செய்முறை:
- முதலில் மீனை நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பெரிய பெரிய பீஸாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். பின் சின்ன வெங்காயத்தை நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். புளிக்கரைசலை தயார் செய்து அதனுடன் சீரகத்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு கரைக்கவும்.
- அதனை கடாயில் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கொதிக்கத் தொடங்கியதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து மீனை சேர்க்க வேண்டும். பின் 15 நிமிடம் கொதிக்கவிட்டு அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து இறக்கினால் அசத்தலான மீன் குழம்பு தயார்.