Indonesia Earthquake: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு..!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

Earthquake (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 08, ஜகார்த்தா (World News): இந்தோனேசியாவில் மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று (ஏப்ரல் 08) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களின் படி, ஜகார்த்தா நேரப்படி அதிகாலை 2.48 மணிக்கு ரிக்டரில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவானதாகவும், பின்னர் அது 5.9 ஆக இருந்ததாகவும் காலநிலை மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாணவருடன் உல்லாசம் அனுபவித்த 41 வயது பெண் ஆசிரியை.. அதிரடி காட்டிய போலீஸ்.!

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:

இதுகுறித்து பேசிய ஆச்சே மாகாண பேரிடர் மேலாண்மை அமைப்பின் மூத்த அதிகாரி ஜோபன் ஏ சின்ஹூவா, தீவுக்கூட்டங்கள் கொண்ட இந்தோனேசியா நில அதிர்வுகள் அதிகம் பதிவாகும் பகுதியில் அமைந்துள்ளது. எனவே, இங்கு அடிக்கடி பூகம்பங்கள் ஏற்படுகிறது. மேலும், 127 எரிமலைகள் உள்ளன எனக் கூறினார். தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement