Israel Gaza War: உணவுக்காக ஏங்கிய மக்கள் மீது துப்பாக்கிசூடு.. 25 பேரை கொன்ற ராணுவம்.. 70 பேர் படுகாயம்.!

காசாவின் உதவி மையம் அருகில் மக்கள் குவிந்ததால் அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிசூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

Israel Hamas War (Photo Credit: @NTarnopolsky X)

ஜூன் 10, ஜெருசலேம் (World news): இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் போரை கைவிட வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலுக்கு பல கோரிக்கைகளை முன் வைத்தாலும், தங்களின் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை எங்களது தாக்குதல் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்து விட்டது. இதனால் காசாவில் வாழும் அப்பாவி பொதுமக்களும் தாக்குதலின் பெயரில் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் ராணுவத்தின் பிடியில் மக்கள் :

காசாவில் வசித்து வரும் மக்களுக்கு உலக நாடுகள் முன்வந்து அடிப்படை உதவிகள் செய்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் அதையும் தடுத்து நிறுத்தி வருகிறது. ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் பேரில் உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு பால் ஊற்றிய பெண்கள்.. காளி போல ஆவேசத்தில் சம்பவம்.! 

உணவுக்காக சென்ற 25 பேர் சுட்டுக்கொலை :

இந்நிலையில் காசா நாட்டின் ரபாவில் நேற்று நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்ட போது ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவிந்ததால் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கையானது 25 ஆக உயர்ந்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமும் அடைந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிசூடு :

இந்த சம்பவம் தொடர்பான இஸ்ரேல் நிறுவனம் கூறுகையில், ரபா பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகில் அவர்கள் இருந்ததாகவும், சந்தேகத்திற்கிடமான வகையில் நபர்கள் இருந்ததால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement