Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 10, கஜபதி (Odisha News): ஒடிஷா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தில், 60 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் பல உள்ளூர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த பெண்கள் 60 வயது நபரின் கொடூர செயலில் இருந்து தப்பிக்க ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர். அவர்களின் திட்டப்படி அனைவரும் ஒன்று சேர்ந்து முதியவரை ஊரில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஃபேஸ்புக் காதலனை நம்பி வந்த பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

முதியவர் எரித்துக்கொலை:

அங்கு முதியவரின் உடலில் மண்ணெணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 60 வயது நபர் உடல் கரிக்கட்டையாகி மரணம் அடைந்துள்ளார். சில நாட்கள் கழித்து மனித உடல் எலும்பு கூடுகள் வனப்பகுதியில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நேரில் சென்ற அதிகாரிகள் முதியவரின் எஞ்சிய உடல் பாகத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் 8 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.