Pope Francis Passes Away: போப் பிரான்சிஸ் மரணம்.. சோகத்தில் மூழ்கிய கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள்..!

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக தனது 88 வயதில் இன்று காலமானார்.

Pope Francis Passes Away (Photo Credit: @PopBase X | @Dexerto X)

ஏப்ரல் 21, வாடிகன் (World News): கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்த போப் பிரான்சிஸ் (வயது 88), கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சுமார் 5 வாரங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், அவரது உடல்நலம் தேறியது.  Earthquake: ஆப்கானிஸ்தான், காஷ்மீர், புதுடெல்லியில் நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்., வீதிகளில் தஞ்சம்.!

போப் பிரான்சிஸ் மரணம்:

இந்நிலையில், நேற்றைய தினம் ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கியிருந்தார். இதனையடுத்து, இன்று (ஏப்ரல் 21) காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் (Pope Francis) உயிர் பிரிந்ததாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. போர் பிரான்சிஸ் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மறைந்த போப்பின் உடல் வாடிகனில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. போப் இறுதி சடங்கு என்பது அவர் உயிரிழந்து 4-6 நாட்களுக்குள் நடக்க வேண்டும். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement