Ukraine-Russia War: 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம்.. ஓகே சொன்ன உக்ரைன்.., அதிபர் டிரம்ப் அதிரடி..!

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து, ரஷ்யா அதற்கு ஒப்புக்கொள்ளும் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Ukraine-Russia War (Photo Credit: @TheSATimes X)

மார்ச் 12, கீவ் (World News): உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் (Russia-Ukraine War) நீடித்து வருகிறது. போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சவுதி அரேபியாவின், ஜெட்டா (Jeddah) நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, மற்றும் பிற அதிகாரிகள் சந்தித்து உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். Pakistan Shocker: பயணிகள் இரயிலை கடத்திய பயங்கரவாதிகள்.. 470 பேர் பிணையக்கைதியாக தவிப்பு? 6 இராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை.! பாகிஸ்தானில் பதற்றம்.!

அதிபர் டிரம்ப்:

இதுகுறித்து அதிபர் டிரம்ப் (Donald Trump) கூறுகையில், சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. அடுத்து ரஷ்யாவுக்குச் செல்ல வேண்டும். ரஷ்யாவும் அதற்கு ஒப்புக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த போரில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் வீரர்களும் கொல்லப்படுகிறார்கள். 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது. போர் நிறுத்தம் கொண்டு வருவது மிகவும் முக்கியம். ரஷ்யாவை இதைச் செய்தால் மிகச் சிறப்பாக இருக்கும். எனவே, இது மிகப் பெரியது என்று நான் நினைக்கிறேன் என அவர் கூறினார்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement