மே 3, புதுடெல்லி (New Delhi): கேவியர் (Caviar) நிறுவனம் தனது முதல் இ- பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு ஹெர்ஸாக் (Herzog) என பெயர் வைத்துள்ளது. இ பைக் என்றால் சைக்கிளில் எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்தி இயங்கக்கூடிய வாகனமாகும். இந்த இ-பைக்கை போர்ஷே இ பைக் கிராஸ் மூன்றாம் தலைமுறை வாகனம் (Porsche eBike Cross 3rd Gen|) எனவும் அழைக்கிறார்கள். Dark Lips Home Remedies: உதடு கருப்பா இருக்கா.? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

சிறப்பம்சங்கள்: இந்த பைக்கில் பவர் ஃபுல்லான ஹிம்மானோ மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் சிறப்பான டிசைன் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இ-பைக் 18 கேரட் தங்கம் கொண்டு உருவாக்கியுள்ளார்கள். 2025ம் ஆண்டு இது விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இ-பைக் விற்பனைக்கு அறிமுகமாகும் போது 44 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 36 லட்சம் ஆகும்.