Team India (Photo Credit : @ITGDsports X)

நவம்பர் 30, ராஞ்சி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் (Team South Africa), இந்திய கிரிக்கெட் அணி (Team India Cricket) 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென் ஆப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (South Africa National Cricket Team Vs India National Cricket Team) இடையே நடைபெறும் போட்டிகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. IND Vs SA Cricket 2025 போட்டியில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வெற்றியை ஏந்திப்பிடிக்க முயற்சிக்கும். அதே நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வெற்றியை உறுதி செய்ய போராடும் என்பதால், ஒவ்வொரு ஆட்டமும் அதிரடியாக சூடுபிடிக்கும். IND Vs SA 2nd Test: 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை துவம்சம் செய்த தென்னாபிரிக்கா.. இந்தியா Vs தென்னாபிரிக்கா போட்டியில் திரில் சம்பவம்.! 

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி(India vs South Africa ODI):

இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தென்னாபிரிக்க அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்கி நடைபெற இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் வழிநடத்துகிறார். தென்னாபிரிக்க அணியின் கேப்டனாக தெம்பா பவுமா வழிநடத்தவுள்ளார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற 70% வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தென்னாபிரிக்க அணி வெற்றிபெற 30% வாய்ப்புள்ளது. மேலும் இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா இணைந்து விளையாட இருப்பதால் ஆட்டம் இன்னும் சூடுபிடித்துள்ளது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் போட்டி எப்போது? (India Vs South Africa Cricket Match)

போட்டி அணிகள்: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா (IND Vs SA)

போட்டி நாள்: முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 30, 2025

போட்டி நேரம்: நண்பகல் 01:30 இந்திய நேரப்படி

போட்டி இடம்: ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச கிரிக்கெட் மைதானம், ராஞ்சி

போட்டி நேரலை: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, சோனி ஸ்போர்ட்ஸ் (Star Sports) டிவி