Hyundai Creta N Line Launched: ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் இந்தியாவில் அறிமுகம்.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!
ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டாவின் என் லைன் தேர்வை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
மார்ச் 12, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா என் லைன் எஸ்யூவி (Hyundai Creta N Line SUV) காருக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில் தற்போது அந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த கார் அதிக கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக திறனை வெளியேற்றும் சிறப்பு வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் விலை ரூ. 16.82 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. Ramadan 2024: தென்பட்ட பிறை.. ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.. அரசு தலைமை காஜி அறிவிப்பு..!
சிறப்பம்சங்கள்: என்8 (N8) மற்றும் என்10 (N10) என்ற இரண்டு விதமான வேரியண்டுகளிலேயே கிரெட்டா என்-லைன் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த இரண்டிலும் 1.5 லிட்டர் டி-ஜிடிஐ மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், 6 எம்டி (6MT) மற்றும் 7 டிசிடி (7DCT) ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இவற்றில் வழங்கப்படுகின்றன. ஆக ஹூண்டாய் கிரெட்டா என் லைன் இந்தியாவில் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.
இதுதவிர, புதிய 18 அங்குல டூயல் டோன்கள் கொண்ட அலாய் வீல், சிவப்பு நிற பிரேக் காலிபர்கள், என் லைன் எனும் பேட்ஜ் ஆகியவற்றை கிரெட்டா என் லைனில் கூடுதலாக பார்க்க முடியும். கிரெட்டா என் லைன்-இல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 160 எச்பி பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. புதிய ஹூண்டாய் கிரெட்டா என் லைன் எஸ்யூவிக்கு இந்தியாவில் ஏற்கனவே புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் இந்த காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது.
(The above story first appeared on LatestLY on Mar 12, 2024 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

