Kawasaki Eliminator Launched: கவாஸாகி எலிமினேட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?.!
கவாஸாகி நிறுவனம் ஆண்டின் தொடக்கத்தை சிறப்பிக்கும் விதமாக 2024 கவாஸாகி எலிமினேட்டர் பைக் மாடலை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
ஜனவரி 03, புதுடெல்லி (New Delhi): கவாஸாகி எலிமினேட்டர் பைக்கின் அறிமுக விலையாக ரூ. 5 லட்சம் 62 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. கவாஸாகி எலிமினேட்டர் ஓர் க்ரூஸர் வகை பைக் மாடல் ஆகும். இது மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக் நிற தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். Food Delivery with Horse: பெட்ரோல் தட்டுப்பாடால் அதிர்ச்சி: குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்த ஊழியர்.!
இதில் 451 சிசி பாரல்லல் ட்வின் வகை எஞ்சின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இது அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 46 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் அசிஸ்ட் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக 310 மிமீ அளவுள்ள டிஸ்க் முன் வீலிலும், 220 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கில் நவீன தொழில்நுட்ப வசதிகளும் பஞ்சமின்றி காணப்படுகின்றன.
(The above story first appeared on LatestLY on Jan 03, 2024 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

