Viral Video: நடந்த கொடூர விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
விபத்தில் இருந்து சிறுவன் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
ஆகஸ்ட் 01, புதுடெல்லி (New Delhi): இன்ஸ்டாகிராமில் சாலை விபத்தில் இருந்து சிறுவன் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் சைக்கிளினை நிதானமாக ஓட்டி வருகிறான். அப்போது அவன் சாலையைக் கடக்க முயற்சி செய்யும்பொழுது மிகவும் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தினால் மோதப்பட்டு சாலையின் மறுப்புறம் சென்று விழுந்தான். ஆனால் சிறுவனின் சைக்கிலானது அருகிலேயே விழுந்தது. அடுத்த நொடியே அங்கு வந்த பேருந்தானது சைக்கிள் என ஏற்றிவிட்டு சென்றது. இந்த விபத்தில் சிறுவன் நூலிழையில் உயிர்தப்பினான். இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் ஒரு கணம் பதறிப் போகும் வகையில், இந்தக் காட்சி உள்ளது. Dark Tourism in India: இந்தியாவில் உள்ள டாப் 5 அமானுஷ்ய பேய் நகரங்கள் எது? பயப்படாம போய் பாருங்க..!
சாலை விபத்துகளால் ஏற்படும் கொடுங்காயங்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்கும் பொருட்டு, சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மிகமிக அவசியமானதாகிறது. சாலையை உபயோகிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிப்பது நம் அனைவரின் கடமையாகும்.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Aug 01, 2024 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

