Ashish Vidyarthi Marriage: 60 வயதில் உற்சாகமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல வில்லன் நடிகர்..!

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதைப்போல, விவாகரத்து பெற்ற பின்னர் 60 வயதில் நடிகர் திருமணம் செய்துகொண்டார்.

Ashish Vidyarthi Marriage: 60 வயதில் உற்சாகமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல வில்லன் நடிகர்..!
Ashish Vidyarthi-Rupali Barua (Photo Credit: Instagram)

மே 25, சென்னை (Cinema News): இந்திய திரையுலகில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஒடிஷா, மராத்தி, பெங்காலி உட்பட பல மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 1995ம் ஆண்டு வெளியான Drohkaal திரைப்படத்திற்காக தேசிய அளவிலான விருதையும் பெற்றிருந்தார். தமிழில் இவர் தில், பாபா, ஏழுமலை, பகவதி, தமிழ், தமிழன், ராமச்சந்திரா, தும், கில்லி, ஜனனம், ஆறு, ஈ, மது, அழகிய தமிழ் மகன், மலைக்கோட்டை, எல்லாம் அவன் செயல், குருவி, பீமா, கந்தசாமி, உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, திருத்தணி, என்னை அறிந்தால், அனேகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Ashish Vidyarthi-Rupa (Photo Credit: Instagram)

இதுமட்டுமல்லாது இன்று வரை பல மொழிகளில் வெளியாகும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வித்யார்த்தி, ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் படத்திலும் நடித்து வருகிறார். இதைத்தவிர்த்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவருக்கு 60 வயதாகும் நடிகர் ஆஷிஷ் வித்யாபாரதிக்கு ரஜோஷி வித்யார்த்தி என்ற மனைவி இருந்தார்.

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில், தற்போது நடிகர் ஆஷிஷ் ரூப்லி பரூ என்ற பேஷன் டிசைனரை திருமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

(The above story first appeared on LatestLY on May 25, 2023 06:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).