D50 Raayan Update: மிரட்டலான லுக்... தனுஷ் நடிப்பில் உருவாகும் ராயன் படத்தில், பிரகாஷ் ராஜின் அசத்தல் கிளிக்ஸ் இதோ.!

டி50 என பெயரிடப்பட்டு உருவாகி வந்த தனுஷின் படத்திற்கு ராயன் என தலைப்பு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

D50 Raayan Update: மிரட்டலான லுக்... தனுஷ் நடிப்பில் உருவாகும் ராயன் படத்தில், பிரகாஷ் ராஜின் அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
Dhanush 50 Raayan Movie Prakash Raj Look (Photo Credit: @SunPictures X)

பிப்ரவரி 23, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வெளியான வாத்தி படத்தில் நடித்த தனுஷுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படம் பெரிய வெற்றியை அடைந்தது. IND Vs ENG Test: ரன்களை குவிக்க முடியாமல் திணறும் இங்கிலாந்து; மதியத்திற்குள் 5 விக்கெட் காலி.. புதிய சாதனை படைத்த அஸ்வின்.. விபரம் உள்ளே.! 

டி50 ராயன் திரைப்படம்: அதனைத்தொடர்ந்து, 2024ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தனுஷின் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வெற்றி, வசூல் சாதனை செய்தது. இதற்குப்பின் டிஎன்எஸ் என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்திற்கு முன்பே தனது சொந்த கதை மற்றும் எழுத்துக்களில் தனது 50வது (Dhanush 50) படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவித்து இருந்தார். Calls will be Monitored by the Govt? மக்களின் செல்போன்களை உளவு பார்க்கும் மத்திய அரசு?.. வைரலாகும் தகவலின் உண்மை பின்னணி என்ன?.! 

பிரகாஷ் ராஜ் (Prakash Raj) இணைவு: இப்படத்தை சன் பிக்சர்ஸ் குழுமம் தயாரித்து வழங்குகிறது. படத்தின் இசையமைப்பு பணிகளை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொள்கிறார். இப்படத்தில் நடிகர்கள் செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே சூர்யா உட்பட பலர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜும் நடிக்கிறார். இந்த அறிவிப்பை படக்குழு உறுதி செய்துள்ளாது. ஆக்சன்-திரில்லர் பாணியில் உருவாகும் ராயன் (Raayan) திரைப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிலும் வெளியாகிறது.

மிரட்டலான பிரகாஷ் ராஜின் அசத்தல் லுக் இதோ:

(The above story first appeared on LatestLY on Feb 23, 2024 06:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).