Kalvan Movie Trailer: பரபரப்புடன் அனல்பறக்கும் காட்சிகள்.. ஜிவி பிரகாஷின் 'கள்வன்' பட டிரைலர் இதோ.!
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் ஈரோடு, சத்தியமங்கலம் பகுதியில் எடுக்கப்பட்ட அம்மக்களின் வாழ்வியலை கருத்தாக கொண்ட கள்வன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
மார்ச் 23, சென்னை (Cinema News): பி.வி சங்கர் இயக்கத்தில், தில்லி பாபுவின் அக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், ரேவாவின் பின்னணி இசையில், ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்களில் உருவாகியுள்ள திரைப்படம் கள்வன் (Kalvan). ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் மற்றும் அதனையொட்டிய வனப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாகவே நடைபெற்று முடிந்தது.
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின் திரைக்கு ஏப்ரல் 04ல் வரவுள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக தோன்றி இருக்கிறார். அவருடன் பாரதி ராஜா, இவானா, தீனா, ஜி. ஞானசம்பந்தன், வினோத் முன்னா உட்பட பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் பிவி சங்கர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருக்கிறார். சான் லோகேஷ் எடிட்டிங்கில், திலீப் சுப்புராயன் சண்டைக்காட்சிகளுடன் படம் உருவாகி இருக்கிறது. Delhi Metro Holi Celebration Atrocity: மெட்ரோ இரயிலா? கட்டில் மெத்தையா?.. இளம்பெண்களின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.! வீடியோ உள்ளே..!

மக்களின் வாழ்வியலை ஒன்றிய திரைப்படம்: வனப்பகுதியில் வாழும் மக்கள் சந்தித்த இடர்பாடுகள் மற்றும் அதில் இருந்து மீண்டு வர அவர்கள் போராடும் சூழ்நிலை உட்பட உண்மையில் நடந்த நிகழ்வுகளை தழுவி படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம் தற்போது ஏப்ரல் 04ம் தேதி திரைக்கு வருகிறது.
இன்று படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. அங்கு படத்தின் டிரைலர் காட்சிகள் மற்றும் இசை ஆகியவை வெளியிடப்பட்டன. பல பரபரப்பு காட்சிகளுடன் இடம்பெற்றுள்ள கள்வன் திரைப்படத்தின் டிரைலர் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
டிரைலர் இதோ
:
(The above story first appeared on LatestLY on Mar 23, 2024 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

