Hrithik Roshan 6 Pack: 5 வாரத்தில் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் - மாஸ் காட்டும் ஹிருத்திக் ரோஷன்.!
1980களில் குழந்தை நட்சத்திரமாக தந்தையின் உதவியுடன் திரைத்துறையில் அறிமுகமான ஹ்ரித்திக் ரோஷன், இன்று உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
அக்டோபர் 17, மும்பை (Cinema News): இந்திய திரையுலகில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் இருப்பவர் ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan). இவர் ஹிந்தி சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவரின் தந்தை பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன் ஆவார்.
1980களில் குழந்தை நட்சத்திரமாக தந்தையின் உதவியுடன் திரைத்துறையில் அறிமுகமான ரோஷன், 2000 ஆண்டு முதன் முதலில் Kaho Naa... Pyaar Hai படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தந்தையின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ரோஷனுக்கு, Kabhi Khushi Kabhie Gham திரைப்படம் நல்ல வரவேற்பை அளித்தது. அதனைத்தொடர்ந்து, க்ரிஷ், கிரிஷ் 3, தூம் 2, ஜோதா அக்பர், Zindagi Na Milegi Dobara, அக்னீபாத், பேங் பேங் உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட ஹிருத்திக் ரோஷன், பல பெண் ரசிகர்களை பெற்றவர் ஆவார். கடந்த 2022ல் விக்ரம் வேதா திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பில் இவர் வேதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். Symptoms of Dengue: மழைக்காலத்தில் பரவும் டெங்கு.. அறிகுறிகள் என்ன?.. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?.!
இந்நிலையில், 2024ல் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் பைட்டர் (Fighter 2024 Film) திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார். படத்திற்கு தன்னை தயார்படுத்தும் பொருட்டு, 5 வாரங்களில் தனது உடலில் உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் கொண்டு வந்துள்ளார்.
பைட்டர் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குனர், வியாகாம் (Viacom 18 Studios) நிறுவனம் தயாரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. படத்தில் தீபிகா படுகோன், அனில் கபூர் உட்பட பலரும் நடிக்கின்றனர்.
சிக்ஸ் பேக் வைத்தது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ரோஷன், "எனது குழுவிற்கு நன்றி. இவர்கள் என் பக்கத்தில் இருப்பதால், நான் பாக்கியவானாக இருக்கிறேன். படப்பிடிப்பு இலக்கு தயாராகிவிட்டது" என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Oct 17, 2023 03:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

