Fans Celebrate Siren Movie: ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க மதுரை வந்த நடிகர் ஜெயம் ரவி; உற்சாக வரவேற்பு..!

தன்மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களுடன் ரசிகராக படம்பார்க்க திட்டமிட்ட ஜெயம்ரவி, இன்று சைரன் படத்தின் வெளியீடை தொடர்ந்து மதுரை வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையரங்கு நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

பொழுதுபோக்கு Sriramkanna Pooranachandiran|Abdul Shaikh|
Fans Celebrate Siren Movளியீடு..!Joker 2 Trailer: ஜோக்கர் என்ற ராட்சசனுக்குள் மலர்ந்த காதல்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!
Close
Search

Fans Celebrate Siren Movie: ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க மதுரை வந்த நடிகர் ஜெயம் ரவி; உற்சாக வரவேற்பு..!

தன்மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களுடன் ரசிகராக படம்பார்க்க திட்டமிட்ட ஜெயம்ரவி, இன்று சைரன் படத்தின் வெளியீடை தொடர்ந்து மதுரை வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையரங்கு நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

பொழுதுபோக்கு Sriramkanna Pooranachandiran|Abdul Shaikh|
Fans Celebrate Siren Movie: ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க மதுரை வந்த நடிகர் ஜெயம் ரவி; உற்சாக வரவேற்பு..!
Jayam Ravi Madurai Visit (Photo Credit: @Rameshlaus X)

பிப்ரவரி 16, மதுரை (Cinema News): தமிழ் மொழியில் வெளியான அண்ணாத்த, விஸ்வாசம், இரும்புத்திரை உட்பட பல படங்களில் எழுத்தாளராகவும், கஜினிகாந்த், கனா, ஹீரோ ஆகிய படங்களில் நடிகராகவும் பணியாற்றி பன்முகத்தன்மை கொண்ட நபராக இருந்து வந்தவர் ஆண்டனி பாக்யராஜ். தற்போது ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியாகியுள்ள சைரன் திரைப்படம் ஆண்டனி பாக்யராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இன்று சைரன் படம் வெளியானது: ஆக்சன்-திரில்லர் கதையம்சம் கொண்டு வெளியாகியுள்ள சைரன் திரைப்படம், சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாக்கி உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி உட்பட பல திரைப்பட பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். சென்னை, காஞ்சிபுரம், காரைக்குடி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்புடன் நடைபெற்ற வந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, 16 பிப்ரவரி 2024 இன்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது. Jadeja Morally Admits the Mistake: எஸ்.கான் ரன் அவுட்க்கு காரணம் நானே - தவறை தார்மீகமாக ஒப்புக்கொண்ட ஜடேஜா; இன்ஸ்டாகிராமில் வருந்தி பதிவு.!

Siren Movie Poster (Photo Credit: @Karthi_Offl / @Gautham_Karthik X) (2)

படத்தின் மையக்கரு: இன்றைய நாளில் வெளியாகும் தமிழ் திரைப்படத்தில், அதிக கவனத்தை பெரும் வகையில் சைரன் மட்டுமே வெளியாகியுள்ளது. வேறு படங்கள் ஏதும் திரைக்கு வரவில்லை. ரூபன் எடிட்டிங்கில், செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவில் படம் உருவாகி இருக்கிறது. செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் நாயகன், சிறையில் இருந்து வெளியே வந்து தனக்கு நடந்த அநீதி மற்றும் அதற்கான நியாயத்தை தனது பாணியில் தட்டி கேட்கும் படமாக இப்படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விசுவாசம் திரைப்படத்தில் ஆண்டனி பாக்யராஜின் வசனங்கள் ஜெயம் ரவியை ஈர்க்கவே, தொடர்ந்து இருவரும் சேர்ந்து படம் எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

மதுரை வந்த ஜெயம் ரவி: அதன்படி, தற்போது சைரன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. படத்தின் ஓடிடி வெளியிடு உரிமையை டிஸ்னி ஹாட் ஸ்டார் (Disney Hotstar) நிறுவனமும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் விஜய் (Star Vijay) நிறுவனமும் கைப்பற்றி இருக்கிறது. மார்ச் மாதம் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க திட்டமிட்ட நடிகர் ஜெயம் ரவி, மதுரையில் உள்ள சினி பிரியா திரையரங்கில் படம் பார்க்க வந்திருந்தார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையரங்கு நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. படம் நல்ல விமர்சனங்களை பெறுவதால், படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Thug Life Update: அருள்மொழிவருமன் போனா என்ன.. அதான் அருண் விஜய் இருக்கார்ல.. தக் லைஃப் படத்தின் புதிய அப்டேட்..! yamravi?ref_src=twsrc%5Etfw" rel="nofollow" >@actor_jayamravi Thalaivaa 🔥

Emotional payangrama connect aguthu & Yogibabu JR combo 😄 pic.twitter.com/C7rgrc08lA

— Saran Ajil (@Saran_ajil) February 16, 2024

సిటీ పెట్రోల్ డీజిల్
View all
Currency Price Change