Nani About Kalki 2898 AD Movie: கல்கி 2898 ஏடி; பிரபாஸை 'ஜோக்கர்' என அழைத்த அர்ஷத் வர்சி.. நடிகர் நானி பதிலடி..!
கல்கி 2898 ஏடி படத்தில் நடித்த பிரபாஸை கலாய்த்தவருக்கு, நடிகர் நானி பதிலடி கொடுத்துள்ள சம்பவம் தற்போது நடந்துள்ளது.
ஆகஸ்ட் 22, சென்னை (Cinema News): நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் (Actor Prabhas), அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, ஷோபனா, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான 'கல்கி 2898 ஏடி' (Kalki 2898 AD) திரைப்படம் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாகும். TVK Flag Anthem: "தமிழன் கொடி பறக்குது.." - தவெக கட்சி பாடல் வெளியீடு..!
இந்தப் படம் ரசிகர்களிடமிருந்து சில விமர்சனங்களையும் பெற்றது. சமீபத்திய நேர்காணலில் அர்ஷத் வர்சியிடம் (Arshad Warsi) படம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர், 'பிரபாஸ் இந்தப் படத்தில் ஒரு ஜோக்கரைப் போல இருந்தார். எனக்கு ஒரு மேட் மேக்ஸைப் பார்க்க வேண்டும். இப்படத்தைப் பார்த்த பிறகு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அமிதாப் பச்சனை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்நிலையில், நானி (Actor Nani) தனது சமீபத்திய படமான 'சரிபோதா சனிவாரம்' பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, "அர்ஷத் குறிப்பிடும் நபர், அவர் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய விளம்பரமாக இது இருக்க வேண்டும் எனவும், தேவையில்லாமல் முக்கியமில்லாத விஷயத்தை கொச்சைப்படுத்துகிறீர்கள்" எனவும், நானி பதிலளித்துள்ளார். இதனிடையே கல்கி 2898 ஏடி திரைப்படம் தற்போது OTT-யில் வெளியாகியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 22, 2024 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

